அட, இது தான் அஜித்தின் கையெழுத்தா. நன்றி தெரிவித்து அஜித் எழுதிய கடிதம், யாருக்கு ? எதுக்குன்னு பாருங்க.

0
523
ajith
- Advertisement -

நன்றி கூறி அஜித் குமார் எழுதிய கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் வசூல் சாதனையில் 300 கோடியை நெருங்க இருப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

‘ஏகே 61’ மும்முரமாக முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தின் டைட்டில் ‘வல்லமை’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இப்படி ஒரு நிலையில் ‘Ak 62’ படத்தின் அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் ஏகே 62 உருவாக இருக்கிறது. இது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும், விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடலையும் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித் எழுதிய கடிதம்:

தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கூடிய விரைவில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் அஜித் குமார் நன்றி கூறி எழுதியுள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அஜித் அவர்கள் சமீபத்தில் கேரளாவிற்கு சென்றிருந்தார்.

கடிதத்தில் அஜித் எழுதியது:

அங்கு உள்ள கோவிலில் அஜித் தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் வெளியானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும் நன்றி கூறிய அந்த கடிதத்தை எழுதியுள்ளார். மேலும், அவர்களுடைய குரு க்ரிப்பா டீமுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த கடிதம் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement