ஜாதி மதம் பார்க்காமல் நிச்சயதார்த்தம் வரை சென்ற அஜித் மச்சானின் காதல். ஆனால், திருமணம் நடக்கவில்லை. காரணம் இது தானாம்.

0
3038
richard-ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனர் ஆவார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தான் ‘திரௌபதி’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. சாதி மதமற்ற காதல் திருமணங்களை மையமாகக் கொண்டது தான் படத்தின் கதை. இந்நிலையில் ரிச்சர்டின் நிச்சயதார்த்தம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ரிச்சர்டிற்கு திருமணம் ஆனதா?? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து அவர்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது ரிச்சர்ட் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜாதி மதம் அற்ற காதல் கல்யாணம் குறித்த ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.இதுகுறித்து அவர்களுடைய நண்பர்கள் தரப்பில் கேட்டபோது கூறியது, ரிச்சர்டின் அப்பா பாபுவுக்கு சினிமா தொடர்பான பெரிய குடும்பங்கள் பலவற்றுடன் நல்ல நட்புறவு இருந்தது. அந்த வகையில் தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் ஒருவரின் நட்பு பாபு குடும்பத்துக்கு கிடைத்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். அப்படித்தான் அந்த பாடலாசிரியரின் மகளுடன் ரிச்சர்டுக்கு நட்பானது.

பிறகு அவர்களுடைய நட்பு காதலானது. இவர்களுடைய காதலும் ஜாதி, மதம் கடந்த காதல் தான். இவர்களுடைய காதல் அடுத்த கட்டமாக திருமணம் நோக்கி நடந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்தது.அந்த நிச்சயதார்த்ததை தல. அஜித் அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார் நிச்சயதார்த்தம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த பெண்ணுக்கும், ரிச்சர்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வந்தது. இவர்கள் பிரிவை சேர்த்து வைக்க அஜித் எவ்வளவோ சமாதானம் பேசினார். அதிலும் எந்த ஒரு பயனில்லாமல் போனது. இவர்களுடைய கல்யாண ஏற்பாடுகள் நிச்சயதார்த்ததோடு முடிவடைந்தது. அந்த பெண்ணும், ரிச்சர்டும் இந்த காதலில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. அந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement