அலிஷா அப்துல்லா ஒரு இந்திய பைக் ரேஸ் விளையாட்டு வீரர். இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று, இன்று சாதனையும் படைத்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும், இவர் அஜித்தின் பைக் ரேஸ் தோழி, இவரை பொறுத்த வரை அஜித் என்றால் கடவுள் என்று இவரே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
அஜித் குறித்து பல்வேறு சீக்ரெட்களை இவர் பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் அஜித் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்று கூறிய அலிஷா, கார் ரேஸ் போட்டி நடைபெறும் இடத்தில இருக்கும் அஜித்தை பலர் சூழ்ந்து இருக்கின்றனர். இது குறித்து அலிஷா அப்துல்லா குறிப்பிட்டுள்ளதாவது, இதனால்தான் அஜித் சார் பொது இடங்களுக்கு வருவதே கிடையாது. ரசிகர்கள் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட நேரத்தை பயன்படுத்த விடுவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவரையும் அஜித்தையும் இணைத்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அலிஷாவிற்கு தேசிய மனித உரிமை மற்றும் ஊழல் தடுப்பின் தமிழக மாநில தலைவராக மத்திய அரசு பதவி அளித்து அவரை நியமித்து இருக்கிறது. இந்த பதவியை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்க வில்லை. ஆனால், அந்த நியமன ஆணையை வாங்கிக் கொண்டு நேராக வந்து தனது நண்பர் அஜித்தை பார்த்து உங்களால் தான் எனக்கு இந்த பதவி கிடைத்திருக்கிறது என்று அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
பயில்வான் ரங்கசாமி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்தின் தோழி அலிசா ‘இதுபோன்ற முட்டாள்தனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படி இது போன்ற குப்பைகளை பேச முடிகிறது. அஜித்தை போன்ற பெரிய நட்சத்திரத்தின் பெயரை இப்படி கெடுக்காதீர்கள். என்னையும் அஜித்தையும் இணைத்து இப்படி கிசுகிசுக்களை வெளியிட்டு அவரது பெயரை கெடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்