ரஜினி, விஜய்யை போல ரசிகர்களுடன் அஜித் நடத்திய போட்டோ ஷூட், வீடியோ இதோ (இப்போலாம் வாய்ப்பே இல்ல )

0
484
ajithfans
- Advertisement -

ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய தல அஜித்தின் யாரும் காணாத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய படம் திரையரங்குகளில் வரப்போகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், தல அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை, விசுவாசம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வலிமை படத்தின் ரிலீசுக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வலிமை படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

மேலும், வலிமை படம் பொங்கலன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அஜித் அவர்கள் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வப்போது பைக்கில் சுற்றுலா சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தல அஜித் அவர்கள் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய பழைய, இதுவரை யாரும் கண்டிராத ஒரு அரிய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் ரஜினி போன்றவர்கள் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றனர். ஆனால், அஜித் அதையெல்லாம் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மாதிரி இனிமேல் நடக்காது. ஆனால், இனிமேல் இந்த மாதிரி நடந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். தற்போது இதை சோஷியல் மீடியாவில் தல ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement