ரெட் படத்தில் நடித்த நடிகையா இது – அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?

0
1207
priya
- Advertisement -

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்னவானார்கள் என்ற விவரம் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். முதல்படமே அஜித்துடன் நடித்த நடிகை தற்போது எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பே இந்த பதிவு.

-விளம்பரம்-

ரெட் படத்தில் நடித்த நடிகையின் பெயர் பிரியா கில், மாடல் அழகியான இவர் இந்தியில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘தேரி மேரா சப்னா’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் சினிமாவில் அறிமுகமான போது இவரது வயது 21, இவர் அறிமுகமான முதல் படத்தை இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் தான் தயாரித்து இருந்தார். அந்த திரைப்படம் இந்தியில் மாபெரும் வெற்றியடைந்தது இருப்பினும் நடிகை பிரியா கில்லிர்க்கு தொடர்ச்சியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடம் கழித்து தான் இவருக்கு இரண்டாவது படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தி , மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார் பிரியா கில்.

- Advertisement -

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரெட் ஒரு மாஸ் திரைப்படமாக இருந்தாலும் அஜித் வாழ்வில் ஒரு மிகப் பெரிய தோல்விப் படமாகவே அமைந்தது. சொல்லபோனால் ரெட் திரைப்படத்திற்குப் பின்னர் தான் அஜித் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். மேலும், இந்த படத்தில்தான் முதன் முறையாக அஜித் மொட்டை அடித்து உடலை ஏற்றி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரெட் திரைப்படம் பிரியா கில்லிற்க்கும் ஒரு சிறந்த திரைப்படமாக அமையவில்லை. இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழில் வேறு எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெறவில்லை.

தமிழில் ஒரே ஒரு படத்தில் அதுவும் அஜித்துடன் நடித்த பெருமையுடன் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் நடிகை பிரியா கில். இருப்பினும் இவருக்கு பஞ்சாப், இந்தி, போஜ்புரி போன்ற படங்கள் அதன் பின்னர் கைகொடுத்தது. இருப்பினும் இவரால் பல ஆண்டுகள் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. இறுதியாக 2006 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான பைரவி என்ற படத்தில் நடித்திருந்தா.ர் அதன் பின்னர் இவர் ஒட்டுமொத்த சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விட்டார். தற்போது 43 வயதாகும் இந்த நடிகை இன்னமும் திருமணம் கூட செய்துகொள்ளவில்லையாம். மேலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சொந்தமாக ஒரு மாடல் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம் பிரியா கில். மேலும், விளம்பரங்களுக்கு மாடல் அழகிகளையும் அனுப்பும் வேலையையும் செய்து வருகிறாராம். சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement