சென்னை அணியை அதிரவிட்ட ஆத்விக் – ஜூனியர் Akவிற்கு குவியும் வாழ்த்து மழை.

0
899
Addhvik
- Advertisement -

சென்னை அணியை அஜித்தின் மகன் அதிரவிட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடும் உழைப்பினால் போராடி கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அதோடு விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் படம் ரசிகர்கள் கூறுகின்றனர்.

படம் குறித்த தகவல்:

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருந்தது. படப்பிடிப்பிற்காக அஜித், திரிஷா, இயக்குனர் மற்றும் பட குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்று இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் இறந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மிலன் இழப்பிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அஜித் குடும்பம்:

இதனால் படக்குழு இந்தியா திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் அஜித் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் அஜித் அவர்கள் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்தது. அமர்க்களம் படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இரு வீட்டார் சம்பந்தத்துடன் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகளும் இருக்கிறார்கள்.

அஜித் மகன் செய்த சாதனை:

மேலும், அஜித் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளின் பள்ளி மற்றும் பிற விஷயங்களில் அதிகம் நேரம் ஒதுக்கிடுவார். அந்த வகையில் அஜித் மகன் ஆத்விக் சென்னை கால்பந்து அணியில் சேர்ந்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து சென்னை அணி சார்பாக ஆத்விக் விளையாடி இருக்கிறார். இந்த போட்டியில் இவர் பதக்கமும் வென்றிருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா! என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement