பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்து உள்ளார் பிரபல WWE வீரர் அண்டர் டேக்கர். 90 களில் wwe மூலம் ரசிகர்கள் மனதில் பல நபர்கள் இடம் பிடித்தாலும் அதில் ராக், கேன், ட்ரிபிள் எச், அன்டர் டேக்கர் என்று இன்றளவும் மறக்க முடியாமல் இருக்கும் wwe வீரர்களில் அண்டர்டேக்கரை நிச்சயம் 90ஸ் கிட்ஸ்கள் மறந்து இருக்க மாட்டார்கள். wwe விளையாட்டில் அமானுஷ மனிதனாக கருதப்பட்டவர் அண்டர் டேக்கர் தான்.
அண்டர் டேக்கருக்கு 7 உயிர், அவருடைய உயிர் ஒரு ஜாடியில் இருக்கிறது என்று நம்பும் 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். wwe -வில் இருந்த ஜான் சீனா, ஸ்டோன் கோல்ட், கோல்ட் பர்கே என்று பலர் சினிமாவிலும் ஜொலித்தனர். ஆனால், யாரும் ராக் அளவிற்கு ஜொலிக்கவில்லை. அண்டர் டேக்கர் கூட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : தனது இரண்டு குழந்தைகளுடன் 30வது பிறந்தநாளை கொண்டாடிய ரேஷ்மி – இனிது இனிது படத்துல எப்படி இருந்தாங்க.
ஆனால், அந்த இரண்டு படங்களும் பெரிதாக ஓடவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை அண்டர் டேக்கர் மோத அழைத்து உள்ளார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் அக்ஷய் குமார். இவரது படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு என்றும் பஞ்சம் இருக்காது. மேலும், இவர் உண்மையில் தற்காப்பு கலைகளை கற்றவர். சமீபித்தல் அக்ஷய் குமார் மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
இவரது கில்லாடியோன் கா கில்லாடி திரைப்படத்தில் அக்ஷய் குமார், பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகர் உடன் மோதி வெற்றிப்பெறுவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். அண்டர்டேகரை தோற்கடித்தவர்கள் என பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் படத்துடன் அக்ஷய் குமார் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இந்த மீமுக்கு கமன்ட் செய்த அண்டர் டேக்கர், உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என்று கேலியாக கமன்ட் செய்து இருந்தார். அண்டர்டேக்கரின் இந்த கமென்டிற்கு பதில் அளித்த அக்ஷய் குமார், எனது இன்சூரன்ஸை ஆய்வு செய்துவிட்டு கூறுகிறேன் சகோதரரே என நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.