சூரரை போற்று இந்தி ரீ-மேக்கில் நடிக்க போவது யார் தெரியுமா ? 2020ல தான் இந்த தமிழ் படத்த இவர் கண்டம் பண்ணாரு.

0
483
sooraraipottru
- Advertisement -

சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீ – மேக் செய்யப்படுகிறது. இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளிநடித்து இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஊர்வசி உட்பட பலர் நடித்து இருந்தனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவுசெய்து இருந்தார்.

-விளம்பரம்-

அமேசான் பிரைமில் சக்கை போடு போட்ட படம் ;

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைதயாரித்து இருந்தனர். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் அமேசான் பிரேமில் வெளியாகி இருந்தது.ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருந்தனர்.

- Advertisement -

இந்தி ரீ – மேக் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய இருக்கின்றனர். நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருந்த்னர். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல சீனியர் நாயகனான அக்சய் குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is image-35.png

காஞ்சனாவை கண்டம் செய்த ஹீரோ :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் காஞ்சனா 2 படத்தின் ரீ – மேக்கில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில்நடித்து இருந்தார். இந்த படம் தமிழ் ரசிகர்களால் மிகுந்த கேலிக்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சூரரை போற்று படத்தில் எந்த ஒரு சண்டை காட்சிகளும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இந்தி ரீ- மேக்கில் சண்டை காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய சுதா, இந்தி ரீ – மேக்கில் அந்த ரசிகர்களுக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை செய்து இருப்பதாகவும் படத்தில் இரண்டு சண்டை காட்சிகளை வைத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்தி வெர்ஷனில் 2 சண்டை காட்சிகள் :

பொதுவாக அக்ஷய் குமார் ஆக்ஷனுக்கு பேர் போனவர். இவரது பல படங்களில் இவர் பல ரிஸ்க்கான ஸ்டண்ட்களை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு தான் சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குனீத் மொங்கா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஏற்கனவே படத்திற்கு இருக்கும் சிக்கல் :

சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தை தயாரித்ததாகவும், இந்தி ரீமேக் உரிமையை விற்றதில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாகவும் குனீத் மொங்கா அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement