தனது மகனுடன் இருக்கும் ஏ எல் விஜய். வைரலாகும் குயூட் புகைப்படம்.

0
17018
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-15.jpg

பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏ எல் விஜய்யின் தந்தை அமலா பாலை தனது மகன் ஏன் விவாகரத்து செய்தார் என்பதற்கான காரணத்தை சொன்னார்.அதில், அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டு என்று கூறியிருந்தார்.மேலும், அதே போல தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார் அமலா பால்.

இந்த நிலையில் நடிகை அமலா பால் பவிந்தர் சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூட கூறப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளததையடுத்து இயக்குனர் விஜய் தனது மகனுடன் இருக்கும் குயூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் Bofta தனஞ்ஜெழியன்.

-விளம்பரம்-
Advertisement