ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .!

0
326
vijay

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது.

Jayaram Jayalalitha

இந்த படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்குனர் உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே மறைந்த தெலுங்கு நடிகர் என் டி ஆர் – ன் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கபடவில்லை. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது என்று அதிகாரபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. ஒரு வேலை ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதியாக கூட இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

al-vijay

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்போகும் இந்த படத்தில், திரைப்பட வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றி, எம்ஜிஆரால் ஜெயலலிதா அரசியலுக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டார். பிறகு தன்னைச்சுற்றியிருந்த எதிரிகளுக்கு மத்தியில் துணிச்சலாக அரசியல் செய்த விதம் என பல்வேறு விசயங்கள் இந்தப் படத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.