அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா..! புகைப்படம் உள்ளே

0
1600
Alaipayuthey

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் ஒரு ரொமான்டிக் படமாக ஹிட் ஆனது.நடிகர் மாதவனின் முதல் படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது.சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது என்றும் கூறலாம்.

madhavan

மாதவன் மற்றும் ஷாலினி நடித்த இந்த படத்தில் , நடிகர் மாதவன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் மேடை காமெடியனாக இருந்து வரும் கார்த்திக் குமார் தான் நடிக்கவிருந்தாராம்.

கார்த்திக் குமார் பிரபல பின்னணி பாடகி சுஜித்ராவின் கணவர் ஆவர். சென்னையில் பிறந்த இவர் மேடை காமெடியானாக இருந்து வருகிறார். மேலும் ‘யாரடி நீ மோகினி,கண்ட நாள் முதல், பொய் சொல்லப்போறோம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது, இவருக்கு ‘அலைபாயுதே’ படத்தில் கதானாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதற்காக ஸ்க்ரீன் டெஸ்டி கூட எடுத்து முடித்து விட்டனராம்.

karthik kumar

ஆனால், அப்போது அவர் மிகவும் இளமையாக தோற்றமலித்ததால் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை இழந்தாராம். அதன் பின்னர் தான் நடிகர் மாதவன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தாராம். இருப்பினும் அந்த படத்தில் ஒரு சிறிய கத்தபத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘அலைபாயுதே’ படத்தில் நடிக்கும் போது கிருஷ்ணா குமாரின் வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது.