இது சுத்தமான துயரம். உடல் முழுதும் வலி, நெஞ்சு கனக்கிறது. கொரானாவால் வேதனை படும் நடிகை.

0
9220
actress

ஒட்டுமொத்த உலகையும் சனி என்ற ரூபத்தில் இந்த கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கொரோனா வைரஸினால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசினால் 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அனைத்து நாட்டு அரசுகளும் தீவிரமாக உயிரை கொடுத்து போராடி வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 2095 பேர் பாதிக்கப்பட்டும், 57 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்து உள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.

இதையும் பாருங்க : தனது தந்தையின் மரணம் குறித்து வலிகளை பகிர்ந்த அமலா பால்.

- Advertisement -

மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாக்க இருக்க வேண்டும் என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை என ஒருவரை கூட விட்டு வைக்காமல் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

மேலும், ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் சிலர் இறந்தும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை ஆலி வென்ட்ஒர்த் அவர்கள் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது, எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை.

இதையும் பாருங்க : அந்த புகைப்படத்தில் இருப்பதே நான் இல்லை. அதிர்ந்து போய் கூறிய பாகுபலி பட நடிகை.

-விளம்பரம்-

ஆனால், இப்போது ஜுரம், கடுமையான உடல் வலி, நெஞ்சு வலி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அதனால் குடும்பத்திடம் இருந்து நான் விலகி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. குடும்பத்திலிருந்து விலகி இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர் குணமடைய பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

தற்போது தான் ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் அவர்கள் கொரோனாவிற்கு பலியானார் என்ற தகவல் வந்தது. ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக உள்ள ஜோ டிப்பி ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Ali Wentworth tests positive for coronavirus: I have never been ...

ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு மற்றும் ஹாலிவுட் நடிகைகள் ஓல்கா குரிலென்கோ, இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹாலிவுட்டில் பல நடிகர், நடிகைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement