சமீப காலமாகவே சோசியல் மீடியாக்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது. பொதுவாகவே சோசியல் மீடியாக்களில் நடிகர், நடிகைகளின் புகைப்படம் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். சமூக வலைத்தளங்களில் நடிகைகள் புகைப்படத்தை பதிவிட்டால் அவர்களை பின் தொடர்வதற்கு என்றே கூட்டம் உள்ளது. நடிகைகள் புகைப்படங்கள் பிடித்துவிட்டால் போதும் அதற்கு கமென்ட் செய்து, அதை Share செய்து, அதை டவுன்லோட் செய்து என்று பல வேலைகளை ரசிகர்கள் செய்வார்கள்.
சோசியல் மீடியாவில் அந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள். அதே சமயத்தில் ஒரு சிலர் விஷக்கிருமிகள் நடிகைகளின் புகைப்படங்களை மாப்பிங் செய்து தவறான வேலைகளுக்குப் பயன்படுத்தி வரும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். அந்த வகையில் தற்போது பாகுபலி நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி பிரச்சினையில் சிக்கி உள்ளார்.
ராஜமௌஸி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து உலகையே மிரள வைத்தது பாகுபலி படம். இந்த பாகுபலி படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிகை அனுஷ்காவுக்கு அண்ணியாக நடித்திருந்தவர் நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி. இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இவருடைய Hot புகைப்படத்தை போட்டு டேட்டிங் செய்ய விருப்பமா??? இவரை அணுகுங்கள் என்று டேட்டிங் தளம் ஒன்று விளம்பர புகைப்படமாக அவரது புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த புகைப்படத்தை கண்டு நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
இந்த புகைப்படத்தை குறித்து நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி அவர்கள் கூறியிருப்பது, இந்த புகைப்படத்தை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படி ஒரு விளம்பரத்தில் நான் நடிக்கவே இல்லை. யாரோ என்னுடைய புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். என்னுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், பெயரை கெடுக்கவும் தான் இந்த மாதிரி செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி அவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் இது போன்று நடிகர்களின் புகைப்படம், பெயர், மொபைல் எண் எல்லாம் தவறாக பயன்படுத்தி அருகிறார்கள். இது மிகவும் கண்டனம் கூறிய விஷயம். இதற்கு போலீஸ் கூடிய விரைவில் ஆக்ஷன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.