வீட்டுக்குள்ளேயே கேமரா வைப்பீங்களா ? இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் கொந்தளித்த ஆலியா பட்

0
317
aliah
- Advertisement -

எந்த அனுமதியும் இல்லாமல் தன்னை புகைப்படங்கள் எடுத்த நபர்களின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பிரபல நடிகைக்கான ஆலியா பட். பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட் இவரது கணவர் தான் ரன்பீர் கபூர் அவரும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலனான நடிகர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. பின்னர் சில காலம் ஓய்வெடுத்த அலியா பட் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

-விளம்பரம்-

ரகசியமாக புகைப்படம் எடுப்பு :

இந்த நிலையில் தான் நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த போது ரகசியமாக இருவர் இவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இப்படி எடுத்த புகைப்படத்தை செய்தி நிறுவனங்களிடம் பணத்திற்காக விற்றுள்ளனர். இந்த விஷியத்தை ஆலியா பேட் தான் வீட்டில் இருக்கும் போது யாரோ ஒருவர் தன்னை கண்காணிப்பதாக உணர்ந்துள்ளார். இந்நிலையில் நிமிர்ந்து பக்கத்தில் உள்ள மொட்டைமாடியை பார்க்கும் போது 2 நபர்கள் சூம் லென்ஸ்களை பயன்படுத்தி தன்னை புகைப்படம் எடுத்துள்ளதை அறிந்துள்ளார்.

- Advertisement -

ஆலியா பட் பதிவு :

இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நடிகை ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விஷியத்தை பற்றி ஒரு புத்திவை இட்டுள்ளார். அதில் “நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா? நான் என் வீட்டில் ஒரு சாதாரண மதிய வேளையில் என்னுடைய அறையில் அமர்ந்திருந்தபோது ஏதோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் நிமிர்ந்து பார்த்தேன், என் பக்கத்து கட்டிடத்தின் மொட்டை மாடியில் இரண்டு மனிதர்கள் என்னிடம் கேமராவுடன் இருப்பதைக் பார்த்து பதறிப்போனேன்.

எதிர்க்கும் ஒரு எல்லை இருக்கிறது :

இந்த உலகில் இதுதான் சரி என எவையெல்லாம் அனுமதிக்கப்படுகிறது? இது ஒருவரின் தனியுரிமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். எதிர்க்கும் ஒரு கடக்க முடியாத எல்லை இருக்கும். அனால் இன்று அந்த அனைத்து இவர்கள் கடந்துவிட்டனர்” என்று மும்பை போலீசாரை குறியீட்டு பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விஷயம் பெரிய பரபரப்புக்கு உள்ளகி சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியுள்ளது. பலர் அலியா பட்டுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

போலீசில் புகார் :

இந்நிலையில் இந்த புகார் புரிந்து மும்பை ஹேர் பகுதி போலீசார் நடிகை ஆலியாபட்டை தொடர்பு கொண்டு புகார் அளிக்க கேட்டுள்ளார். ஆனால் ஆலியா பட் புகாரளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில் புகைப்படங்களை வெளியிடுவதற்குப் பொறுப்பான வெளியீட்டாளருடன் ஆலியாபட்டின் ஆட்கள் அவர்களுடன் பேசி வருவதாகவும். இதற்கு பிறகே முறையான புகாரைப் பதிவு செய்வதா? வேண்டாமா? என அவர் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தனர்.

விராட் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆதரவு :

இந்த விஷயம் குறித்த இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி மற்றும் நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது குழந்தை வாமிகாவின் பிறப்பின் போது சந்தித்த இதே போன்ற தனியுரிமை பறிப்பை நினைவு கூர்ந்தார். அதோடு நடிகர் அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக மாறி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement