கால்பந்தாட்ட உடையில் அச்சிட்டு மகளின் பெயரை அறிவித்த ரன்பீர் – ஆல்யா ஜோடி. அரபு, சமஸ்க்ரிதம், பெங்காலி என்று இத்தனை அர்த்தமா ?

0
169
ranbir
- Advertisement -

பிரபல பாலிவுட் சினிமா ஜோடிகளான ரம்பீர் கபூர் மற்றும் ஆலியா கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு விட்டார் பெற்றோர்களும் பச்சை கொடி காட்டினார். இதனால் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான “பிரம்மாஸ்திரா” என்ற திரைப்படத்தில் ரம்பீர் கபூர் மற்றும் ஆலியா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படடிப்பட்ட நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த திருமணமானது ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் திருமணத்தை போலவே பிரம்மாண்டமாக ரம்பீர் கபூர் மற்றும் ஆலியாக்கும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தனர். நான்கு ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 6ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பெற்ற கையோடு வீடு திரும்பிய ரம்பீர் கபூர் மற்றும் ஆலியா புகைப்படங்கள் அப்போது செய்தி ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள் என அனைத்திலும் வைரலானது. இந்நிலையில் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு “ராஹா” என பெயர் வைத்ததாக நடிகை ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் போட்டிருந்த பதிவில் ராஹா (அவரது புத்திசாலி மற்றும் அற்புதமான தாடியால் தேர்ந்தெடுக்கப்பட்டது) என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன… ராஹா, அதன் தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள் சுவாஹிலியில் அவள் ஜாய், சமஸ்கிருதத்தில் ராஹா என்பது ஒரு குலம். பங்களாவில் – ஓய்வு, ஆறுதல், நிவாரணம், அரபு அமைதியில், இது மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் பொருள்படும்.

-விளம்பரம்-

அவளுடைய பெயருக்கு உண்மையாக, நாங்கள் அவளை பிடித்த முதல் கணத்தில் இருந்து – நாங்கள் அதை உணர்ந்தோம்! நன்றி ராஹா, எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு, எங்கள் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன். என்று பதிவிட்டிருந்தார்.மேலும் அந்த புகைபபடத்தில் கால்பந்தாட்ட உடையை தயாரித்து அதில் ராஹா என்று எழுதியுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது எதற்க்காக என்றால் ரம்பீர் கபூர் தீவிர கால்பந்தாட்ட ரசிகர், இவர் ஏற்க்கனவே கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் நீதி திரட்டுவதற்கா நடந்த போட்டியில் கேப்டனாக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஹா என்ற பெயரை அவரது பாட்டியான நீத்து கபூர்தான் வைத்துள்ளார். ஏற்கனேவே கபூர் குடும்பத்தில் மரபு வழியாக “ஆர்” என்ற எழுத்து தொடக்கத்தில் வைக்கப்படும். இந்நிலையில் ரம்பீர் கபூர் மற்றும் ஆலியா குழந்தையான ராஹா விற்கும் “ஆர்” என தொடங்கும் படி வைத்துள்ள தகவலானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement