பெண்கள் வட மாநிலங்களில் பாதுகாப்பாக இருக்க ஹிந்தி அவசியமாக தெரிந்து வைத்திரிருக்க வேண்டும் என தமிழக பாஜக விளையாட்டு பிரிவு நிர்வாகியான அலிசா அப்துல்லா நேர்காணல் ஒன்றில் கூறியது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறுவதிலிருந்தே பந்தயத்தில் ஆர்வமாக இருந்த இவர் தன்னுடைய ஒன்பது வயதிலேயே ரேஸிங்கை தொடங்கி பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த காலமாகவே தமிழ் நாட்டில் அனைவரும் கட்டாயம் ஹிந்தி மொழி தெரிந்த வைத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் அதர்வா, பிரியா ஆனந்த் நடித்திருந்த “இரும்புக்குதிரை” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் உதவியாளராக நடித்திருப்பார். அதனை தொடந்து இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருந்த ‘சாத்தான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் கடந்த ஆக்டோபர் மாதம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் விளையாட்டு பிரிவு உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில்தான் செய்தி சேனல் ஒன்றில் பேசிய அலிசா நம்முடைய தமிழ் நாட்டில் பெண்களுக்கு இங்கே பாதுகாப்பு இருக்கிறது ஆனால் வெளிமாநிலங்களின் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என்று நமக்கு தெரியாது. ஒருவேளை ஒரு பெண் வெளிமாநிலங்களான டெல்லியிலோ, பெங்களூருவிலோ தனியாக இரவு 9மணிக்கு நடந்து செல்லவேண்டிய நேரத்தில் சில ஆண்கள் அவர்களை பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டால்.
அப்போது அவர்களை ஹிந்தியில் கொச்சை வர்த்தியால் திட்டியோ, ஹிந்தியில் கூச்சலிட்டோ அங்கிருந்து தைரியமாக தப்பித்து செல்லலாம் என்க கூறினார். அதற்கு நெறியாளர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நிர்பயா என்ற பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து நிர்பயாவிற்கு ஹிந்தி தெரிந்தும் அவர் ஹிந்தி தெரிந்த நபர்களால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார் எனக் கூற அது தனக்கு புரிகிறது எனக் கூறினார் அலிசா அப்துல்லா.
ஒரு கணக்கீட்டின் படி கடந்த வருடம் இந்தியாவில் அதிகபட்சமாக முப்பதாயிரத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ள. அதில் காங்கிரசு ஆட்சிபுரியும் ராஜஸ்தான், பாஜக ஆட்சி புரியும் உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம், ஹரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் அதிகப்படியான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹிந்தி தெரிந்த பெண்களுக்கே வட மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் அலிசா அப்துல்லா ஹிந்தி தெரிந்தால் பாலியல் வன்கொடுமையை இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனக் கூறியிருப்பது தற்போது பேசு பொருளாக சமூக வலைதளங்களில் மாறியுள்ளது. மேலும், இவரது கருத்தை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர். ஆனால், தான் சொல்ல வந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அலிஷா கூறியுள்ளார்.