டிகிரி வாங்கும் முன்பே “ட்ரீட்மெண்ட்டா”? – பா ஜ க அலிஷா அப்துல்லாவை போலி டாக்டர் என்று விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
456
alisha
- Advertisement -

பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா தன்னுடைய படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்தி வருவது குறித்து திமுகவினர் அவர் மீது அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் மிக பிரபலமான கார்,பைக் ரேசர் அலிஷா அப்துல்லா. இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர் தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

பின் இவர் சாதனையும் படைத்து இருக்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், இவர் நடிகர் அஜித்தின் தோழியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா அவர்கள் அண்ணாமலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பாஜக கட்சியில் சேர்ந்த அலிஷா அப்துல்லா:

இவருக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் இந்தி மொழி குறித்து பேசி பாஜக உறுப்பினர் அலிசா அப்துல்லா சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதில் அவர், என்னை தமிழ் படிக்க சொல்லி அழுத்தம் கொடுத்தனர். ஹிந்தி திணிப்பு என்று சொல்கிறீர்களே இது தமிழ் திணிப்பு இல்லையா? என்று பேசியிருந்தார். இதனால் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய படிப்பை முடிக்கும் முன்பே கிளீனிக் ஒன்றை நடத்தி வரும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அலிஷா அப்துல்லா நடத்தும் கிளினிக்:

அதாவது, தற்போது பாஜக உறுப்பினர் அலிசா அப்துல்லா கரிஷிமா பியூட்டி கிளினிக் என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார். இதில் இவர் சிஇஓவாக இருக்கிறார். இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர், நீங்கள் இன்னும் படித்தே முடிக்கவில்லை. எப்படி கிளினிக் நடத்துகிறீர்கள்? டிகிரி வாங்கும் முன்பு எப்படி நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியும்? டிகிரி இல்லாமல் எப்படி டெர்மாலாஜி மருத்துவத்தை மேற்கொள்ள முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

அலிஷா அப்துல்லா கூறியது:

இதற்கு அலிசா கூறியிருப்பது, நான் எனது மருத்துவ பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் ஒரு கிளினிக்கை நடத்தி வருகிறேன். அங்கு 2 மூத்த டாக்டர்கள் எம்பிபிஎஸ் உடன் பணியாற்றுகிறார்கள். நான் பட்டம் பெற்ற அழகுக்கலை நிபுணர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கிளினிக்கை வந்து பார்க்கலாம். அழகு கலை நிபுணர்கள் லேசர் கருவிகளை பயன்படுத்த டாக்டராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

அலிஷா அப்துல்லா மீது புகார்:

இதனை அடுத்து நீங்கள் லேசர் கருவிகளை மட்டும் பயன்படுத்தவில்லையே ஊசிகளையும் பயன்படுத்துகிறீர்கள். அது சட்டப்படி தவறு. உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றெல்லாம் குற்றம் சாட்டியிருந்தார்கள். பின் திமுக சார்பாக அலிசா மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement