வலிமை படத்தில் வந்த சாரா யார் தெரியுமா ? அடேங்கப்பா நிஜத்தில் இப்படிப்பட்டவரா. இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா ?

0
1773
sara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளிவந்த வலிமை படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது. கடந்த வாரம் தான் வலிமை படம் ரிலீசாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் வரும் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். இதனால் வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

வலிமை படத்தில் நடித்த சாரா யார்:

மேலும், இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய வேலையை கனகச்சிதமாக செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் வில்லன் கார்த்திகேயா உடன் ஒரு பெண் இருப்பார். அவர் சாரா என்ற கதாபத்திரத்தில் படத்தில் நடித்திருப்பார். தற்போது யார் இந்த சாரா? என்று தான் ரசிகர்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் தேடி வருகின்றனர். அதோடு இவரை பற்றிய மீம்ஸ், ட்ரோல்ஸ் தான் எல்லா பக்கத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இவருடைய உண்மையான பெயர் Gurbani Judge. இவர் வட இந்தியாவை சேர்ந்தவர். இவர் பிட்னஸ் டிரெய்னர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

Gurbani Judge திரைப்பயணம்:

ஆனால், இவர் ஆரம்பத்தில் சேனல்களில் பணியாற்றியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிரபலமான விஜேவாக இருந்திருக்கிறார். பின் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இவரைப்பற்றி வந்த கண்டிராவர்சி, சர்ச்சை என எல்லாத்தையும் கடந்து ரன்னர் அப் இடத்தை பெற்றார். இவர் விஜே வாக மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். பின் இவருக்கு பட வாய்ப்பும் வந்தது. இவர் முதன்முதலாக app kka suroor என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திக்கா என்ற படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வலிமை படத்தில் Gurbani Judge கதாபாத்திரம்:

மேலும், இவர் Amazon primeல் வெளியான Four More Shots என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதற்கு பிறகு தான் இவருக்கு அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வலிமை படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இவர் பைக் ரைடர்ஸ் குழுவுடன் இருக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இவர் இதற்கு முன்னாடி படங்களில் நடித்து இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது வலிமை படத்தின் மூலம் தான். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் அவர் உடற்பயிற்சி வீடியோக்கள் என அனைத்தையுமே பகிர்ந்து வருவார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

Advertisement