தெருக்குழாயில் தண்ணீர் குடித்த பிரபல ஸ்டார் நடிகர்.! இணையத்தை கலக்கும் வீடியோ.!

0
913
- Advertisement -

சினிமா பிரபலங்களை பொருத்தவரை அவர்கள் எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை தான் விரும்புவார்கள் என்று நம்மில் பலரும் நினைத்து வருகின்றனர். அதேபோல நடிகர் நடிகைகள் என்றாலே அவர்களுக்கு என்று படப்பிடிப்பின்போது பல்வேறு வசதிகளும் செய்யப்படுகிறது ஆனால் இதில் ஒரு சிலர் ஆடம்பரத்தையும் எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர், தென்னிந்திய சினிமாவில் மிக சிறப்பாக நடனமாடும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த பல்வேறு படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

- Advertisement -

மேலும், இவர் தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இதற்காக இவர் வசிக்கும் பகுதியில் காலையில் ஜாகிங் செல்வதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் கூறியிருக்கும் பகுதிகளுக்கும் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே அங்கே தெருவில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். அதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வர, இவ்வளவு பெரிய நடிகராக இருந்து கொண்டு இவ்வளவு எளிமையாக நடந்து கொண்ட அல்லு அர்ஜுனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

Advertisement