அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட பிறகும் வேட்டையாடிய ‘புஷ்பா 2’ வசூல் – 10 நாட்களில் இத்தன கோடியா?

0
250
- Advertisement -

புஷ்பா 2 படத்தின் உடைய வசூல் அப்டேட் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

புஷ்பா 2 :

அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் மட்டும் தான் இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக தோலில் சுமந்து உள்ளார். இப்படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் ரூபாய் 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை படைத்திருக்கிறது.

புஷ்பா 2 வசூல்:

இந்நிலையில் புஷ்பா படத்தின் உடைய வசூல் சாதனை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, 10 நாட்களிலேயே புஷ்பா 2 பட்டன் 1292 கோடி வசூல் செய்திருக்கிறது. இது தொடர்பாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இனிவரும் நாட்களிலும் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

பெண் உயிர் இழப்பு:

இதற்கிடையில் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்தபோது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி அநியாயமாக உயிர் இழந்த சம்பவம் அனைவரும் அறிந்தது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே இது தான். இறந்த பெண் மணியின் எட்டு வயது மகன் நெரிசலில் படுகாயம் அடைந்து இருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுன் கைது:

இதற்கு காரணம், தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தது தான். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிமாக திரண்டது. இதனால் போலீஸ் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜனை போலீஸ் கைது செய்திருந்தார்கள். பின் இவரை சில விதிகளுக்கு உட்பட்டு தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement