புஷ்பா 2 : 1,000 கோடி சாதனையை மூன்றே மாதங்களில் நான் முறியடிப்பேன் – அல்லு அர்ஜூன் சொன்ன தகவல்

0
170
- Advertisement -

புஷ்பா 2 படத்தின் வெற்றி விழாவில் அல்லு அர்ஜுன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா.

-விளம்பரம்-

இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

புஷ்பா 2 :

அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ஒரு வழியாக இப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.
மேலும், படம் வெளியாகி ஏழு நாட்களிலேயே ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

விழாவில் அல்லு அர்ஜுன்:

இதை மைத்ரீ மூவிஸ் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் புஷ்பா 2 படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்யும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் டெல்லியில் புஷ்பா 2 படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பேசியிருந்தார்கள். அப்போது நடிகர் அல்லு அர்ஜுன், இந்திய ரசிகர்கள், இன்டர்நேஷனல் அளவில் இருக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி.

-விளம்பரம்-

புஷ்பா படம் குறித்து சொன்னது:

‘ புஷ்பா என்றால் வைல்ட் ஃபயர்’ நீங்க பொழிந்த அன்பு தான் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். இந்த வெற்றி படக்குழுவினர் அனைவருக்கும் போய் சேரும். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர் இயக்குனர் சுகுமார் தான். அவர் தான் இந்த படத்தை தூக்கி சுமந்து, கடுமையாக உழைத்திருந்தார். இது அவருடைய கனவு. இது நம் இந்திய சினிமாவின் வெற்றி. இந்த ஆயிரம் கோடி வசூல் என்பது இந்தியர் அனைவருடைய அன்பின் வெளிப்பாடு வந்தது. இந்த வசூல் சாதனைகள் எல்லாம் அடுத்தடுத்து முறியடிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

இந்திய சினிமா குறித்து சொன்னது:

அடுத்தடுத்து வருபவர்கள் இந்த வசூல் சாதனையை முறியடிப்பார்கள். ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். அடுத்த மூன்று மாதத்தில் சம்மர் சீசனில் இந்த வசூல் சாதனையை நானே முறியடிப்பேன். காரணம், அதுதான் வளர்ச்சி. வளர்ச்சி தான் எனக்கு பிடிக்கும். இன்னும் இந்திய சினிமா வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த மொழி, அந்த மொழி என்றெல்லாம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இது இந்திய சினிமாவினுடைய வளர்ச்சி. இதை மேலும் மேலும் வளர்ப்பதில் எனக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதாக உணர்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement