புஷ்பா 2 பட விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதைத்தொடர்ந்து 'புஷ்பா 2' திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது. புஷ்பா 2 படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஒரு வழியாக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
புஷ்பா 2:
இந்த இரண்டாம் பாகத்திலும், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், சுனில், ராவ் ரமேஷ், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் பிரதாப் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். அதோடு புஷ்பா 2 படத்திற்கு குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படக்குழு இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாக சென்னையில் 'புஷ்பா 2' ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்லு அர்ஜுன் பேசியது:
அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு மேடையில் பேசியிருந்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் தமிழில் பேச ஆரம்பித்த உடன் அங்கிருந்த பலருமே தெலுங்கில் பேசு என்று சொல்லியிருந்தார்கள். இதை கேட்டு அல்லு அர்ஜுன், நான் தமிழில் தான் பேசுவேன். எந்த ஊர் சொல்கிறோமோ அந்த ஊர் மொழியில் பேசுவது தான் மரியாதை. நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இந்த நாளுக்காக எத்தனையோ வருஷம் எதிர்பார்த்து இருந்தேன்.
https://www.youtube.com/watch?v=lYWkBjQjW5s&t=131s
தமிழ் மக்கள் குறித்து சொன்னது:
இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பது ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்க்கையில் முதல் இருபது வருடம் எப்படி இருக்கோ அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்க என்று சொல்வார்கள். அப்படித்தான் நான் எங்கு போனாலும் சென்னை தி.நகர் காரன் தான். புஷ்பா படத்திற்கு நான் பல இடங்களுக்கு போனேன். ஆனால், சென்னைக்கு வரும்போது அந்த பீலே வேற. உங்களுடைய வாழ்க்கையில் இந்த படத்திற்காக நான் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறேன். என்னுடைய ஊரில் என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு வேணும் என்று விரும்பினேன். அது இன்னைக்கு நடந்திருக்கிறது.

படம் குறித்து சொன்னது:
நான்கு வருஷமாக ஒரு பெண்ணை பார்க்கிறேன் என்றால் அது ராஸ்மிகா தான். என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க செய்ததற்கு அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் நான் கொஞ்சம் தயாராகினேன். காரணம், அவர் அந்த அளவுக்கு கடினமாக உழைக்கக் கூடியவர். நான் ஆரம்பத்தில் ஒரு படம் பண்ணிட்டு ஒரு வருடம் வீட்டில் தான் இருந்தேன். அப்போது சுகுமார் தான் எனக்கு 'ஆர்யா' படம் கொடுத்தார். அதற்குப் பிறகு தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்த நபர்களில் முக்கியமானவராக நான் அவரை பார்க்கிறேன். இப்போது கூட படம் தரமாக வரவேண்டும் என்று ரொம்பவே உழைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவரால் இங்கு வர முடியவில்லை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.






