சூர்யா படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர்.! யார் அவர்..? காரணம் இதோ.!

0
580
Surya

நடிகர் சூர்யா தற்போது கே வி ஆனந்த் இயக்கத்தில் ‘சுர்யா 37’ என்ற பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ‘கௌரவம் ‘ படத்தில் நடித்த தெலுகு நடிகர் அல்லு சிரிஷ் என்பவர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து அவர் தீடீரென விலகியுள்ளார்.

surya

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அல்லு சிரிஷ் “சூர்யாவின் 37 வது படத்தில் நான் விலகுகிறேன். இந்த படத்திற்க்கு கொடுக்கப்பட்ட தேதிகள் தற்போது நான் நடித்து வரும் ABCD படத்துடன் ஒத்துப்போகவில்லை,படப்பிடிப்பு தேதிகளையும் ஒத்தி வைக்க முடியவில்லை. எனவே, நான் சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தேன், அதற்கு கே வி ஆனந்த் சாரும் ஒப்புக் கொண்டார்.

நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தேன். ஆனால் , இந்த படத்தில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கே வி ஆனந்த் சார் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கும் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பட குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

allusirish

நடிகர் சூர்யாவின் 37வது படமான இந்த படத்தில் நடிகை ஷெயிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் மோகன்லால், போமன் இரானி, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவர் இந்த படத்திற்கான 4 பாடல்களை ஏற்கனவே அமைத்து விட்டாராம்.