தன் வாழ்நாள் லட்சியம் குறித்து பேட்டி ஒன்றில் பிரேமம் பட இயக்குனர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகி இருந்த நேரம் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அல்போன்ஸ் அவர்கள் 2015ஆம் ஆண்டு நிவின் பாலியை வைத்து பிரேமம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மலையாள மொழி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனால் மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக அல்போன்ஸ் மாறினார்.
அல்போன்ஸ் திரைப்பயணம்:
இன்றும் பிரேமம் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பிற மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் அவர்கள் இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர், நடிகர், ரைட்டர், எடிட்டர் என பல பணிகளை செய்து வருகிறார். தற்போது இவர் ஒரு படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
அல்போன்ஸ் அளித்த பேட்டி:
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசை குறித்து கூறியிருந்தது, நான் கமல் சார் அல்லது ரஜினி சார் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை சொல்வேன். நிச்சயம் அவர்கள் இருவருக்கும் என் கதை பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நான் நம்புகிறேன். அதனால் தான் நான் இதுவரை என் வாழ்வில் அவர்களை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.
அல்போன்ஸ் ஆசை:
ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் இருந்து எதிர்காலத்தில் கமல் சாரையோ அல்லது ரஜினி சாரையோ சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் என் கதையைக் கூறுவேன். அவர்களுக்கு பிடித்து விட்டால் என்னுடைய பல திறமைகளையும் அந்த படத்தில் போட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நல்லதொரு பொழுதுபோக்கு படமாக கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவரிடம் ஏற்கனவே ரசிகர் ஒருவர் விஜயை வைத்து படம் பண்ணுவீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு அல்போன்ஸ் கூறியிருந்தது,
அல்போன்ஸ் இயக்கும் நடிகர்:
விஜய் சார் என்னை ஒருநாள் படம் பண்ண அழைப்பார். நான் காத்திருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி அல்போன்ஸ் கூறியதன் மூலம் அவர் முதலில் விஜய் வாய்ப்புக் கொடுப்பாரா? கமல் வாய்ப்பு கொடுப்பாரா? ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எந்த உச்ச நடிகரின் படத்தில் இவர் கோலிவுட் பக்கத்திற்கு வரப்போகிறார்? என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.