-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அதிபர் மனைவியுடன் உறவு, ரகசிய கர்ப்பம், ஆபாச பேச்சுக்கள் – வரம்பு மீறும் நிகழ்ச்சி, வலுக்கும் எதிர்ப்புகள்

0
469
Kangana

எல்லை மீறும் லாக் கப் நிகழ்ச்சி குறித்த எதிர்ப்புகள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்திருந்த லாக் அப் நிகழ்ச்சி சமீபத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் முதல் முறையாக லாக் அப் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்க ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகள் எழுந்தது. பின் எல்லாவற்றையும் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்றால் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் என்று பலரும் குறிப்பிடுவார்கள். ஆனால், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பயங்கர சர்ச்சையான நிகழ்ச்சியாக லாக் கப் நிகழ்ச்சி உருவெடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

இந்த லாக் கப் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் நடக்க இருக்கும். இதில் 16 போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், தடங்கல்கள், மன வலிமையை சோதிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க நினைக்கும் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு கங்கனா ரனாவத்தின் சிறையில் பல வாரங்கள் இருந்து நடத்துபவரின் கொடுமையும், அடக்குமுறையும் தாங்க வேண்டி இருக்கும். இந்த சிறையில் யார் தங்குவார்கள்? யார் தங்க மாட்டார்கள்? என்பது பார்வையாளர்களின் வாக்களிப்பில் முடிவு செய்யப்படும்.

லாக் கப் நிகழ்ச்சி குறித்த தகவல்:

குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் சிறையிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்த நிகழ்ச்சியில் கரண் மெஹ்ராவை தாக்கிய பரூக்கி, நிஷா ராவல், திருமண முதல் நிர்வாணம் வரை எனப் பல சர்ச்சைகளில் சிக்கிய பூனம் பாண்டே போன்ற பல திரைப்பிரபலங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. யாருடைய வாழ்க்கை சர்ச்சைகளும், குழப்பங்களும் நிறைந்தது. அவர் தனது வாழ்க்கையின் ரகசியங்களை திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள பல ரகசியங்களை போட்டு உடைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் பூனம் பாண்டே தனது மேலாடையை கழற்றி விடுவதாக வாக்கு அளித்து இருந்தார்.

பூனம் பாண்டே ரகசியம்:

-விளம்பரம்-

ஆனால், பலர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. பூனம் முழு மேலாடை இன்றி செல்வார் என்று பலர் நம்பினர். ஆனால், பூனம் டீ-சர்ட்டை கழற்றுவேன் என்ற வாக்குறுதியை நான் காப்பாற்றினேன். என்னால் விதிகளை மீற முடியாது என்று கூறி டி ஷர்ட்டை கழட்டினார். இவரை தொடர்ந்து போட்டியாளராக அரசியல் விமர்சகரான தெஹ்ஸீன் அவர்கள் சக போட்டியாளரான சயிஷாவை காப்பாற்ற சொன்ன ரகசியம் பலரையும் அதிர வைத்தது. அதாவது இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் அவர் மனைவியுடன் தெஹ்ஸீன் உறவு கொண்டதாக கூறினார். நைட் கிளப் ஒன்றை 2 நாட்கள் புக் செய்தால் அந்த தொழிலதிபர், நானும், அவரின் மனைவியும் உறவு கொள்வதை பார்க்க வேண்டும் என்பதுதான் அவர் விதித்த நிபந்தனை.

-விளம்பரம்-

தெஹ்ஸீன் ரகசியம் :

அந்த அனுபவம் நன்றாக இருந்தது. அந்த தொழிலதிபர் சற்று தொலைவில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், நாங்கள் இருவரும் உடலுறவு கொள்ளும் போது அவர் நெருங்கவோ, தொடவோ கூடாது என்பது மட்டும் தான் நான் விதித்த விதி. அதனால் அவர் அருகில் வரவே இல்லை என்று கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பின் இந்தி திரை உலகில் வளர்ந்து வரும் மந்தனா கரிமி. இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்து இருந்தார். தற்போது இந்த லாக் கப் நிகழ்ச்சியில் வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையில் மிகப் பெரிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மந்தனா கரிமி ரகசியம்:

அதில் அவர், முன்னணி இயக்குனர் உடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவர் கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்து இருக்கிறார். அந்த இயக்குனர் பெண் உரிமைகள் பற்றிப் பேசுபவர். பலருக்கும் கடவுளாக இருப்பவர் என்றும் கூறி இருந்தார். இப்படி இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தங்களின் ரகசியத்தை சொல்கிறேன் என்று வரம்பு மீறி பேசி இருக்கும் செயல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அது மட்டுமில்லாம இந்த நிகழ்ச்சியை 10 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news