தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.
பயில்வானும் சர்ச்சை பேச்சுகளும் :
மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானஸா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் பாருங்க : தமிழ் சினிமாவ பாத்து எல்லாரும் கேட்டாங்க, ஆனா இப்போ – விக்ரம் படம் வெற்றி குறித்து அருண் விஜய் மற்றும் ஹரி எமோஷனல்.
பயில்வான் குறித்து ஆல்யா மானஸா :
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட ஆல்யா மானஸா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பெரும் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து ராஜா ராணி 2விலும் நடித்து வந்த இவர் இரண்டாம் குழந்தைக்கு பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இருப்பினும் கடைதிறப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் “லிட்டில் வீ” என்ற பெயரில் பல் மருத்துவமனை தமிழகத்தில் சென்னை, கோவை மாநகரங்களில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் – கோவை சாலையில் இந்த மருத்துவமனையின் புதிய கிளை மருத்துவர் ஷிஃபா தலைமையில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆல்யா மானஸாவிடம் ‘திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
நாங்கள் என்ன பாவம் செய்தோம் :
இதற்கு பதில் அளித்த ஆல்யா மானஸா ‘மற்ற துறையில் யாரும் என்னுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களா நண்பர்கள் இருக்கிறார்களா சண்டை நடக்காமல் இருக்கிறதா லவ் இல்லாமல் இருக்கிறதா ? மற்றதுறை என்றால் வெளியில் வராது சினிமா துறையில் இருப்பதால் மட்டும் வெளியில் வந்து விடுகிறது, அதற்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம் அதை அவர் வெளிக்கொண்டு வருவது எப்படி அனைவருக்கும் வெளிக்கொண்டு வந்தால் அனைவரும் ஒப்புக் கொள்ளப் போகிறார்களா என்ன ? அவர் செய்வது கொஞ்சம் கஷ்டமாதா தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
வெளுத்து வாங்கிய சுசித்ரா :
இது ஒருபுறம் இருக்க கடந்த சில மதங்களுக்கு முன்னர் பிரபல பின்னனி பாடகி சுசித்ரா குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பயில்வான் ரங்கநாதனுக்கு போன் செய்து பேசியுள்ளார் சுசித்ரா ‘சுசித்ரா முழுப் பைத்தியம், ஹோட்டல்ல போயிட்டு காட்டு கத்து கத்து கத்துவாங்க, கார்த்திக் குமார் பாவம் அவர்தான் காப்பாற்றினார், இருந்தாலும் சுசித்ரா முழு பைத்தியம் ஆகி விட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளீர்கள், சுசித்ரா யார் என்ன கேட்டாலும் கொடுப்பார்கள் என ஒரு இக்கு வைத்து பேசி உள்ளீர்கள். நீங்கள் ரொம்ப எல்லை மீறி கேவலத்தின் உச்சிக்கே சென்று விட்டீர்கள் என்று கூறி இருந்தார்.