தமிழ் சினிமாவ பாத்து எல்லாரும் கேட்டாங்க, ஆனா இப்போ – விக்ரம் படம் வெற்றி குறித்து அருண் விஜய் மற்றும் ஹரி எமோஷனல்.

0
492
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். இருந்தாலும் பல வருடங்களாக இவர் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதற்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் இவரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஓ மை டாக். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : அம்மா வேலை செய்த பள்ளியில் படிப்பு, விஜய் வாழ்ந்த வீடு இப்போ எப்படி இருக்கு பாருங்க – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

யானை படம்:

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், கேஜிஎஃப் படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யானை படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனரும், அருண் விஜய்யும் பல மாவட்டங்களில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகின்றார்கள்.

யானை படத்தின் பிரஸ்மீட்டில் நடந்தது:

அப்போது அவர்கள் கூறியிருந்தது, எல்லா பிரஸ்மீட்டில் நாங்கள் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். லோகேஷ் கனகராஜூக்கு போன் பண்ணி, நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? என்று எனக்கு தெரியாது. ஆனால், உங்களுடைய விக்ரம் படத்தை தான் நாங்கள் எல்லா இடத்திலுமே பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர் நம்முடைய வெற்றி என்று சொல்லுங்கள் என்று சொன்னார். ஏனென்றால், தற்போது தமிழ் சினிமா உடைய வெற்றியாக விக்ரம் படம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி | Vijay Sethupathi In Vikram

விக்ரம் படம் குறித்து ஹரி-அருண் விஜய் சொன்னது:

இந்த வருடம் பல வெற்றிப்படங்கள் வந்தது. ஆனால், தமிழில் பெரிதாக வெற்றி பெற்ற படம் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. ஆனால், அதையெல்லாம் முறியடித்து விக்ரம் படம் சாதனை படைத்திருக்கிறது. பான் இந்தியப் படமாக விக்ரம் படம் இருப்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் மிகப் பெரிய வெற்றி தான் என்று கூறியிருந்தார்கள். இப்படி இவர்கள் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் விக்ரம்.

Vikram Trailer Kamal Lokesh Kanagaraj | விக்ரம் ட்ரைலர்

விக்ரம் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

Advertisement