வருஷத்துக்கு ஒரு சொகுசு கார், ஆடம்பர வீடு – தற்போது கடனில் தத்தளிப்பதாக புலம்பும் ஆல்யா மானஸா

0
351
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். பின் இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு பின் மீண்டும் ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதோடு இவர்கள் தனியாக யூடுயூப் சேனல் தொடங்கி பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

சஞ்சீவ் – ஆல்யா குறித்த தகவல்:

இப்படி இருவருமே தங்களுடைய கேரியரில் கவனமாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுடனும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அதோடு இவர்கள் சொந்தமாக கார், வீடு என்று வாங்கி இருக்கிறார்கள். இப்படி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து சொகுசான வாழ்க்கையை ஆலியா மானசா-சஞ்சீவ் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலியா மானசா இப்படித்தான் சம்பாதிக்கிறார். நீங்களும் இதே போல் சம்பாதித்து கோடிஸ்வரராக இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று சோசியல் மீடியாவில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது.

ஆல்யா அளித்த புகார்:

இதை பார்த்து ஆத்திரமடைந்த ஆலியா மானசா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் பேட்டியில் கூறியிருப்பது, சன் டிவி சீரியலில் கம்மிட் ஆனபோது வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியில் பேச கூப்பிட்டு இருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டும் வந்தேன். அது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அந்த நிகழ்ச்சியில் தான் நான் ஏதோ ஒரு மார்க்கெட்டிங் முறையில் கணக்கில்லாமல் சம்பாதிக்கிறதா என்னை பேட்டி எடுத்த அன்கரிடம் சொல்லி இருந்தார்கள். அப்படியே அவரையும் சம்பாதிக்க சொல்லி தூண்டி விட்டதாகவும் ஒரு செய்தி வந்திருந்தது. ஆனா, நான் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சிக்கு போனது மட்டும்தான் உண்மை.

-விளம்பரம்-

புகார் குறித்து ஆல்யா பேட்டி:

அந்த நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்கிற முறை பற்றி எல்லாம் ஏன் பேசப் போகிறேன்? பத்தாயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும் என்று சொன்னதெல்லாம் நம்ப வச்சுருக்கார்கள். அதேபோல் நான் கார் , வீடு வாங்கினேன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே இஎம்ஐ என்று எத்தனை பேருக்கு தெரியும். இன்னைக்கும் எங்கள் பெயரில் கடன் இருக்கிறது. கடன் வாங்கினால் திருப்ப கட்ட சக்தி இருக்கு. அதனால் எனக்கு கடன் கிடைக்குது வாங்குகிறேன். எல்லாத்துக்கும் ரெக்கார்டு இருக்கு. குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரி ஆகிடனும் என்ற நினைப்பு என்ற ரத்தத்தில் கிடையாது. என்னைப் பற்றி தவறான செய்தி வந்த பத்திரிகையில் லேஅவுட்டே போலி தான். அதனால்தான் நான் புகார் தந்தேன்.

இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட சமீபத்தில் நான் வெளிநாடு போயிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள் அந்த செய்தியை நிஜம்னு நம்பி அவங்களும் சம்பாதிக்க என்னிடம் கேட்டார்கள். அதற்குப் பிறகுதான் நான் உஷார் ஆகி புகார் கொடுத்தேன். இதை பிரபலமானவங்க, படிச்சவங்களே எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள் என்றால் மற்றவர்களை என்ன சொல்வது? என் விளம்பரம் பார்த்து இதுவரை எங்கெங்கே எத்தனை பேர் ஏமாந்தாங்களோ தெரியாது. அதனால் என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இப்படி ஏமாத்திட்டு திரிகின்ற அந்த கும்பலை கைது செய்ய சொல்லி போலீஸ் இடம் மறுபடியும் பேசலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement