புகழ் அண்ணா இப்படி எல்லாம் பண்ணாதீங்க – தனது காதலியிடம் புகழ் நடந்துகொண்ட விதத்தால் TTF வருத்தம்

0
528
- Advertisement -

த் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிப்பது தான் விஜய் டிவியுடன் வழக்கம். அந்த வகையில் இந்த சீசன் வரும் 27 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீஸனின் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் நடுவராக இணைந்து இருக்கிறார்.விஜே ரக்சன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள்.

- Advertisement -

அதேபோல் இதுவரை வந்த சீசனங்களில் கலந்து கொண்ட கோமாளிகளின் சிலர் இந்த சீசனிலும் வருவார்கள்.புது கோமாளிகளும் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இதில் ரசிகரகளுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் அக்‌ஷய் கமல், ஷாலின் ஜோயா,திடியன், போன்றவர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்கள். இதில் ஷாலின் ஜோயா கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான `கண்ணகி’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும், பிரபல யூடுயூபரான டிடிஎஃப் வாசனும் ஐவரும் காதலிப்பதாக சமூகவலைதளங்களில் கிசு கிசு கூட எழுந்தது. ஆனால், இருவரும் அதை மறுத்தோ, சம்மதித்தோ எந்தவொரு விளக்கமும் அதற்கு கொடுக்கவில்லை.

தொடர்ந்து இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஜோயவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் TTF வாசன். அதில் ‘நான் ஜோயா குக்கு வித் கோமாளிக்கு செல்லும் போதே இர்பான், குர்ஷியிடம் அவளை நன்றாக பார்த்துக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். ஆனால், புகழ் அண்ணா இவளை கிள்ளுவது தொடுவது எல்லாம் பார்த்தல் கஷ்டமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Advertisement