விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஹாட் ஜோடிகள் என்றால் அது ராஜா ராணி தொடரின் செம்பா மற்றும் கார்த்திக் ஜோடி தான். இந்த தொடரில் செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விஜய் டிவியே பிரம்மாண்டமாக நிச்சயதார்தத்தையும் நடத்தி வைத்தது. இந்த நிலையில் ஆல்யா மானஸா இன்று (மே 27) தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை இவரது காதலர் வெளிநாட்டு சொகுசு ஓட்டலில் நடத்தியுள்ளார்.