அவளுக்கு 2 வயசு தான் ஆகுது பாவம் – மகளை நினைத்து அழுத ஆல்யா மானஸா. இதோ வீடியோ.

0
1554
alya
- Advertisement -

மகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து ஆலியா மானசா அழுத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இந்த ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆல்யா பிறந்த இரண்டாவது குழந்தை:

இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்து வந்தார். இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை அடுத்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஆல்யாவிற்கு மகன் பிறந்து இருக்கிறார்.

சஞ்சீவ் நடிக்கும் சீரியல்:

ஆல்யாவிற்கு இரண்டாம் குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது ஆல்யா மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார். ஆனால், சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

ஐலா பாப்பா பள்ளிக்கு போன வீடியோ:

தங்கள் குழந்தைகள் செய்யும் சேட்டை என்று பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களுடைய சேனலை லட்சக்கணக்கான பேர் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஆல்யா எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, சஞ்சீவ்-ஆல்யாவின் குழந்தை ஐலா பாப்பாவை முதன் முறையாக ஸ்கூலுக்கு அனுப்புகின்றனர். பிரபல பிரைவேட் ஸ்கூல் ஒன்றில் ஐலாவை பஸ் டே ஸ்கூல் வழியனுப்ப மொத்த குடும்பமும் செல்கின்றது. வழக்கம்போல் செம க்யூட்டாக ஜாலியாக இருக்கிறார் ஐலா.

ஆல்யா எமோஷனலான காரணம்:

பின் அவரை கிளாஸ் ரூமுக்குள் விட்டுவிட்டு வெளியே வந்து விடுகிறார் ஆல்யா. ஐலா பாப்பா அம்மாவையும், அப்பாவையும் தேடி அழுகிறார். இதை ஆல்யாவால் பார்க்க முடியாமல் அவரும் எமோஷனல் ஆகி அழுகிறார். பின் ரொம்ப பாவம், ரெண்டு வயது தான் ஆகுது, பார்த்த கஷ்டமா இருக்கிறது என்று சஞ்சீவ் இடம் ஆல்யா சொல்கிறார். அவரை சமாதானம் செய்கிறார் சஞ்சீவ். பின் ஒருமணிநேரம் கிளாஸ் முடிந்தவுடன் வீட்டிற்கு வருகிறார் ஐலா. இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement