கேவலமா இருக்கு ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு ராஷ்மிகா போல ஆடி பல்ப் வாங்கிய ஆல்யா.

0
727
rashmika
- Advertisement -

ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு ஆலியா மானசா நடனம் ஆடி இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஆலியா மானசா. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார்கள். அதோடு சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா. பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்தார் ஆலியா

- Advertisement -

ஆலியா குறித்த தகவல்:

அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். பின் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் போடும் வீடியோவை ஏகப்பட்ட ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ஆலியா நடிக்கும் சீரியல்:

பின் ஆலியா மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுக்க கடுமையாக உடற்பயிற்சி செய்து இருந்தார். அதற்கான வீடியோ எல்லாம் வெளியாகி இருந்தது. விடா முயற்சிக்கு பின் ஆலியா உடல் எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இவர் மீண்டும் சீரியலில் நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் தான் இவர் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். இந்த சீரியலை சரிகம புரொடக்ஷன் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

ஆலியா நடன வீடியோ:

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஆலியா மானசா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும், நடன வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆலியா மானசா பகிர்ந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அதாவது, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். அந்த வகையில் தற்போது ஆலியா மானசாவும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கேவலமா இருக்கு என்று மோசமாக விமர்சித்து ஆலியா மானசாவை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Advertisement