ராஜா ராணியன் இந்த கவுரவத்தை பெற்ற புதிய சந்தியா – ஆல்யா மானஸாவை மறந்ததா சீரியல் குழு.

0
494
alya
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. அதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா. பின் இந்த ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா. அதே நேரம் சீரியலும் முடிவுக்கு வந்தது.

-விளம்பரம்-

ராஜா ராணி 2 :-

பின் விஜய் டிவியில் ராஜா ராணி 1 சீரியல் வெற்றியை தொடர்ந்து. ராஜா ராணி 2 எடுப்பதாத திட்டமிட்டு ஆல்யா மானசாவை நாயகியாக நடிக்க வைத்தனர். நயகனாக திருமணம் சீரியலின் முலம் புகழ் பெற்ற சித்துவை நடிக்க வைத்தனர். வில்லியாக ஆர்ஜெ அர்சனாவை நடிக்க வைத்தனர். வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் ஆல்யா மானசாவின் கனவர் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்து வந்தார். கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

- Advertisement -

ரியாவின் நடிப்பாள் மறுபடியும் எழுந்த ராஜா ராணி 2 :-

ஆல்யா விலகியதை அடுத்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகிய பின் ரியாவை சந்தியாவாக ஏற்க மறுத்தனர். சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலுடன் மெகா சங்கமம் என இரண்டு சீரியலையும் இனைத்தனர். அதுமட்டும் இல்லாமல் ரியா தனது தத்துருவமான நடிப்பால் மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இப்பொழுது மறுபடியும் ராஜா ராணி 2 சகஜ நிலைக்கு திரும்பியது. பின் ஆல்யாவிற்கு மகன் பிறந்து இருக்கிறார். ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது ஆல்யா மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார். ஆனால், சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.

500 எப்பிசோடுகளை கடந்து ராஜா ராணி 2 :-

ராஜா ராணி 2 சந்தியா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்த ஆலியா மானசா சீரியலை வெற்றிப்பாதையில் கூட்டி சென்றார். அந்த சீரியலில் ஆலியா மானசா விலகியவுடன் உயிரோட்டம் இல்லாமல் இருந்த சீரியலை தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா மறுபடியும் வெற்றி பாதையில் அழைத்து சென்றார். ராஜா ராணி 2 500 எபிசோடுகளையும் கடந்து வந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் வழக்கம் போல விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தப்பட்டு அதற்கான ஷூட்டிங்கும் நடந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. அந்த ஷோவில் பங்கேற்றவர்கள் புகைப்படங்களை வெளியிடும்போது. அந்த புகைப்படங்களில் ஆலியா மானசாவை தவிர அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இடம்பெற்று இருந்தனர். ஆலியா மானசா இந்த ஷோவில் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

ஆல்யா ரீ-என்ட்ரி:

ஆல்யா மானசாவும் அவர் கனவரும் யூடியுப் சேனல் வைத்திருக்கிறார்கள். ஆல்யா மானசாவின் கனவர் யூடியுப்பில் வந்த வீடியோ ஓன்றில் மறுபடியும் சீரியலுக்கு வருவியா என கேள்வி கேட்டார். அதற்கு ஆல்யா, சீரியலில் நடிக்க சென்றுவிட்டால் கட்டாயம் டயட் இருக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. எனவே இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக மாறிய பின்பு உடல் எடையை குறைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று சொல்கிறார். உடனே சஞ்சீவ், உனக்கு யாருடன் நடிக்க ஆசை? என கேட்க, உங்களுடன் தான் என்று சைகை காட்டினார் ஆல்யா. ஆனால், நான் எப்படி அந்த சீரியலை விட்டு வர முடியும் என்கிறார் சஞ்சீவ். ஆலியா உங்களுடன் தான் நடிப்பேன் என்று கூறி கடைசியாக இன்னும் சில மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று ஆல்யா கூறியிருக்கிறார்.

Advertisement