Breast Milkல் உருவான Jewelleryஆ – ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த Gift, இது என்னனு தெரியுதா ?

0
1145
alya
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-155.png

குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டுவந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாகஇருந்து வந்தார்.

- Advertisement -

ஆல்யாவிற்கு இரண்டாம் குழந்தை :

இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை தொடர்ந்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ஆல்யாவிற்கு மகன் பிறந்து இருக்கிறார்.

மகனுக்கு ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்த சஞ்சீவ் ஆல்யா :

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் இரண்டாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போறீங்க என்று கேள்வி கேட்டக்பட்டதற்கு ‘பெண் குழந்தை பிறந்தால் லைலா, ஆண் குழந்தை என்றால் அர்ஷ்’ என்று கூறி இருந்தார். தற்போது ஆல்யாவிற்கு இரண்டாம் குழந்தை ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

தாய்பாலால் உருமாவான கிப்ட் :

இப்படி ஒரு நிலையில் தனது இரண்டாம் குழந்தை கருவில் இருந்த போதே ஒரு ஸ்பெஷலான கிப்ட் ஒன்றை தயாரித்து இருக்கின்றனர். அது என்னவெனில் ஆல்யா மானஸாவின் Baby Bumpஐ ஒரு அச்சாக செய்து இருக்கின்றனர். மேலும், இதில் தாயின் தாய்ப்பாலை கலந்து செய்யப்பட்ட பொருள் என்றும் கூறி இருக்கின்றனர். மேலும், Breast milk கால் உருவான பல ஆபரணங்களை செய்யும் இன்ஸ்டா பக்கம் ஒன்றையும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

புதிய மகனுக்கு புதிய கார் :

கடந்த சில வாரங்களுக்கு சஞ்சீவ் தான் ஏற்கனவே வைத்திருந்த Mercedes C- class என்ற 50 லட்ச ரூபாய் காரை தனது சகோதரருக்கு கிப்ட்டாக கொடுத்திருக்கிறார். அதே போல வாங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தங்களின் ‘Mini Cooper’ காரை கூட விற்று இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தங்கள் மகன் பிறந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறார்கள் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி.

Advertisement