ராஜா ராணி தொடர் புகழ் ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்.! எப்போ தெரியுமா.!

0
1335
Alya-manasa-sanjeev
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். 

-விளம்பரம்-

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக நடிகை மானஸா, மானஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இதையடுத்து மானஸ், சுபிக்ஷா என்பவரை காதலிக்க துவங்கினர்.

- Advertisement -

அதே போல நடிகை மானஸாவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க துவங்கினர். இவர்கள் இருவரும் காதலை தெரிவித்த பின்னர் இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வாரகள் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சஞ்சீவ் மற்றும் ஆல்யாவிற்கு சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகள் என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவின் போது கல்யாணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement