திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் – இப்படி தான் இவங்க திருமணம் நடந்ததாம். அவர்கேள வெளியிட்ட வீடியோ.

0
6549
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருந்தது. இந்த தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தார்கள். அதையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியை நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்பதால் அவரது பெற்றோர்கள் ஆல்யாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் அவரது தந்தை மட்டும் ஆல்யா-சஞ்சீவிடம் பேசி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி விஜய் டிவியில் ந்டைபெற்றது.

- Advertisement -

அப்போது ஆல்யாவின் அம்மாவும் வந்து ஆல்யாவை வாழ்த்தினார். இப்படி ஒரு நிலையில் இவர்களது யூடுயூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தங்களது திருமணம் எப்படி நடந்தது என்ற தகவலை கூறியுள்ளனர். இந்த வீடியோவில் பேசியுள்ள சஞ்சீவ், ஆல்யா பிறந்தநாள் அன்று அன்று சர்ப்பரைஸாக ஈசிஆர் உள்ள கோவிலுக்கு அழைத்து போய் தாலி கட்டியதாகவும, திருமணம் செய்துகொண்ட பிறகு ஆல்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஆல்யா குடும்பத்தினர் ஏற்றுகொள்ளாததால் மிகவும் கஷ்டப்பட்டு ஓகே வாங்கியதாக சஞ்சீவ் கூறினார். அப்போது குறுக்கிட்ட ஆல்யா, என்ன நடந்தாலும் சஞ்சீவி மிஸ் செய்து விடக்கூடாது என நான் உறுதியாக இருந்தேன். திருமணத்திற்கு பின்னர் நான் சரியான முடிவு எடுத்தாக உணர்ந்ததாக மகிழ்ச்சியாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் தங்கள் ரிசப்ஷன் நடந்த வீடியோவையும் இணைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement