விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பான இந்த தொடர் இல்லதரசிகள் மட்டுமல்லாது இளசுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும், செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா மானசாவும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிச்சயதார்தத்தை விஜய் தொலைக்காட்சியே படு கோலாகலாமாக நடத்தி வைத்தது.
திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம் மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆல்யா மானஸா கழுத்தில் இஸ்லாம் மதத்தில் அணியும் தாலியும் இருக்கிறது. சஞ்சீவின் நிஜப்பெயர் “syed Azharuddin Buhari” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : பேப்பரை ஆடையாக அணிந்து சின்னத்தம்பி சீரியல் நடிகை ரீமா கொடுத்த போஸ்.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானஸா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். மேலும், இவர் பல்வேறு அழகு சாதன பொருட்களுக்கு தூதுவராக இருந்து வருவதால் அடிக்கடி எதாவது ஒரு பொருளை விளம்பரபடுத்தி சில புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அழகு சாதன பொருள் ஒன்றை விளம்பரபடுத்த சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் ஆல்யா.
தற்போது இந்த புகைப்படம் தான் நெட்டிசன்களின் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே சீரியலில் அழகு தேவதையாக இவரை கண்ட ரசிகர்கள், இந்த புகைப்படத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை கண்டு கொஞ்சம் மிரண்டு போய்யுள்ளர்கள். ஆனால், ரசிகர்களின் கமன்ட்களை படிக்க முடியாமல் ஆல்யா மானஸா கமன்ட் செக்ஷனை ஆப் செய்து ரசிகர்களின் கேலி கிண்டலில் இருந்து தப்பித்துள்ளார்.