`நான் என்ன மிருகக் காட்சி சாலையில் உள்ள மிருகமா? புகைப்படம் எடுத்ததால் கடுப்பான டாப்ஸி.

0
349
- Advertisement -

டாப்சி பன்னு தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். மாடலிங் துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என ஒரு இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-
taapsee-pannu

இந்தியில் முன்னனி நடிகையாக வலம் வரும் டாப்சி :-

அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன.

- Advertisement -

இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி இறுதியாக கேம் ஓவர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் டாப்ஸி தமிழில் ஜன கன மன என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படங்கள் எடுக்க மறுப்பு :

இந்நிலையில் பிரபல நடிகையாக நடிகை டாப்சி பன்னு இந்தியாவில் வலம் வந்தாலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது. செய்தி ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது பேன்றவற்றை வெகு காலமாகவே எதிர்த்து வருகிறார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெரும். இதனால் நடிகை டாப்சி பன்னுவை நெட்டிசங்கள் பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப்சி பன்னு கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பேட்டியில் கூறியது :

நான் 10 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறேன். எனவே என்னை பற்றி செய்தி ஊடகங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டேன் என்று. அப்படியிருக்கும் போது நான் என்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரும்போது புகைப்படம் எடுப்பது, நான் எங்காவது சென்றால் பின்தொடர்ந்து வருவது போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. மேலும் சில நேரங்களில் கார் கண்ணாடியில் கேமராவை வைத்தெல்லாம் என்னை புகைப்படம் எடுத்திருப்பதுண்டு அதனை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன் என்று கூறினார்.

நான் என்ன மிருகமா :

மேலும் நான் ஒரு நடிகையாக இருந்தாலும் மற்றவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. சினிமாவில் நடிகையாக இருப்பதினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நானும் மற்றவர்களை போலத்தான் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். அதனால் அதற்காக என்னுடைய சுதந்திரத்தை யாரும் என்னிடம் இருந்து பறிக்க அனுமதி இல்லை. நான் வெளியே செல்லும் போது என்னை கேமெராவுடன் பத்திரிகையாளர்கள் பின் தொடர்கிறார்கள் நான் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகமா? என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் நடிகை டாப்சி பன்னு கூறியிருந்தார்.

Advertisement