ஆடை இல்லாமலேயே நடித்து விட்டேன், இதெல்லாம் ஒரு விஷயமா என்று அமலா பால் அளித்திருக்கும் அதிரடி பதில் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அதற்கு பிறகு இவர் மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பிரிவிற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அமலா பால் திரைப்பயணம்:
அதிலும் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படம் மிக சர்ச்சை ஆகி இருந்தது. இதன் இடையில் இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்று கூட தகவல் வெளியானது. ஆனால், அது வெறும் போட்டோ ஷூட் தான் என்று கூறி இருந்தார் அமலா பால். தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.
அமலா பால் நடித்த படம்:
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
ஆடு ஜீவிதம் படம்:
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்த்ததை விட நன்றாக பூர்த்தி செய்து இருக்கிறது. தற்போது இவர் மலையாளத்தில் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தான் அமலாபால் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அமலா பால் அளித்த பேட்டி:
சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது. அந்த ட்ரைலரில் பிரித்திவிராஜ் அமலா பாலின் லிப்ஸ் காட்சி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அமலா பாலிடம் கேள்வி கேட்டதற்கு அவர், ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொல்லும்போது என்னிடம் லிப் லாக் ஆட்சி இருப்பது குறித்து சொன்னார்கள். படத்தில் இருக்கும் கதைக்கும் அந்த முத்த காட்சி ரொம்ப முக்கியம் என்று சொன்னதால்தான் நான் நடித்தேன். கதைக்கு தேவை என்பதற்காக நான் நிர்வாணமாக நடித்திருக்கிறேன். லிப் லாக் காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அமலாபால் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.