AL விஜய்யை காதலிக்கும் முன்பே வேறு ஒருவரை காதலித்துள்ள அமலா பால். அவரே சொன்ன கார்னர் சீட் ரொமான்ஸ் சம்பவம்.

0
384
amalapaul
- Advertisement -

காதலனுக்கு தியேட்டரில் கார்னர் சீட்டில் முத்தம் கொடுத்திருக்கிறேன் என்று அமலா பால் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
amalapaul

பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு வெளிவந்த மைனா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அமலாபால். பின் இவர் விஜயுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவி உடன் நிமிர்ந்து நில், அதர்வா உடன் முப்பொழுதும் உன் கற்பனை என பல படத்தில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

அமலா பால் விவாகரத்து:

ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பிரிவிற்கு பின் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஆடை படம் மிக சர்ச்சை ஆகி இருந்தது. தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

amala-paul

அமலா பால் நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் அமலா பால் நடித்த ‘கடாவர்’ திரைப்படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடாவர் படம் குறித்த தகவல்:

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘கடாவர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

A-l-Vijay-amala-paul

ராஜூ வூட்ல பார்டி:

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக அமலாபால் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருக்கிறார். அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்டி. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக அமலா பால் கலந்துகொண்டிருந்தார். அதில் அவரிடம் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்து இருந்தார்.

அமலா பால் டீன்ஏஜ் வயது காதல் :

அப்போது தனது டீன்ஏஜ் வயது காதல் அனுபவங்களை குறித்து கேட்டதற்கு அமலா பால் கூறியிருந்தது, டீன் நான் டீன் ஏஜ் வயதில் ஒருவரை காதலித்து இருக்கிறேன். அவருடன் ஒரு முறை தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன். அதுமட்டுமில்லாமல் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் போது எனது காதலனுக்கு முத்தம் கொடுத்தேன் என்று கூறி இருக்கிறார். ஆனால், அந்த காதலன் யார்? அவர் பெயர் என்ன? என்பது குறித்து அமலா பால் எதுவும் கூறவில்லை.

Advertisement