உடைந்த கையை வைத்துக்கொண்டு கேரள மக்களுக்கு அமலாபால் செய்த செயல்.! புகைப்படம் உள்ளே

0
313
Amala-Paul-Flood

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வருவதால் அங்குள்ள பல்வேறு மாநிலங்கள் மழை வெள்ளத்தால் சீர்குலைந்து இருக்கிறது. மழையின் பாதிப்பால் இதுவரை 324-க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து `ரெட் அலர்ட்” பகுதியாகக் கேரளா அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு நடிகர் , நடிகைகளும் நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார் நடிகை அமலா பால் . அவர் கையில் கட்டுடன் கடையில் நிவாரண பொருள்கள் வாங்கி வரும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை அமலா பால் ‘அதோ என்று பறவை போல ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுத்து வரும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று கடந்த மார்ச் மாதம் வெளியாகி இருந்தது. சமீபத்தில் நடிகை அமலா பால் இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்றில் நடித்த போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் தனது கையில் கட்டு போட்டுள்ளார் நடிகை அமலா பால்.

amala

சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்ததைத் தொடர்ந்து, தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கியதால் அமலா பாலை பலர் பாராட்டி வருகின்றனர். அவர் கடையில் பொருள்கள் வாங்கும் போட்டோவை அவரின் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்