விவாகரத்து..! காதல் மீது நம்பிக்கை.! எல்லாம் 2 நாள் தான்.! மனம்திறந்த அமலா பால்..!

0
127
Amala-paul
- Advertisement -

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரவிந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

actress amalapaul

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு அவருடன் விவாகரத்தானது. இருப்பினம் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமலா பால் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் திருமண வாழக்கை குறித்தும் பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள நடிகை அமலா பால் ”வாழ்க்கையில் கவலையே இல்லாமல் வாழ முடியும் என்று நான் கூற மாட்டேன். எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு இரண்டு நாட்கள் சோகமாக இருப்பேன். பின்னர் அதில் இருந்து விடுபட்டு என்னுடைய அடுத்த வேலயையை பார்க்க சென்றுவிடுவேன். அப்படி இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ” என்று தெரிவித்துள்ளார்.

amala-paul-al-vijay

இயக்குனர் ஏ எல் விஜயுடன் விவாகரத்து பெற்றாலும் தற்போது தனது சொந்த வாழ்வில் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார் நடிகை அமலா பால். என்னதான் விவாகரத்தான சோகத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டேன், அதனால் ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறினாலும், அதன் பாதிப்பு இன்னும் இருந்து வருவதாகவும், இருப்பினும் காதல் மீது நம்பிக்கையுடன் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார். அதே போல சில முன்னனி நடிகர்களிடன் அறிவுரைகளை கேட்டு அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதாக கூறியுள்ளார் நடிகை அமலா பால்

Advertisement