சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.
இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது, பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இவர்கள் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை முற்றிலும் மறுத்தார் அமலா பால். விவாகரத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.
இதையும் பாருங்க : கைதி பட தீனாவுடன் Kpy-யில் கலக்கிய சரத்திற்கு காதல் திருமணம். நிச்சயதார்த்த புகைப்படம் இதோ.
அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. . மேலும், சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார். அதிலும் அவர் இணையங்களில் வெளியிட்டு வரும் புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலா பால் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது தோழி ஒருவர் பாட அவரை கட்டி அனைத்து முத்தமிட்டபடி கொஞ்சு விளையாடினார் அமலா பால். இந்த வீடீயோவை கண்ட ரசிகர் ஒருவர் நீங்கள் என்ன லெஸ்பியனா அதாவது ஓரின சர்க்கையாளரா என்று கமன்ட் செய்துள்ளார். இருப்பினும் இந்த வீடீயோவை அமலா பாலின் ரசிகர்கள் பலரால் லைக் செய்யப்பட்டு தான் வருகிறது.