காற்று கூட புக முடியாத அளவு கட்டி அணைத்திருக்கும் அமலா பால். இவர் தான் அந்த காதலரா ?

0
88370
amala-paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் சிந்துசமவெளி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் விஜய் விக்ரம் தனுஷ் ஜெயம்ரவி என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துவிட்டார். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is post-0-jpeg.jpg

- Advertisement -

பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் இது ஒருபுறமிருக்க அமலாபாலின் இரண்டாம் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : எப்படி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டீர்கள். ரசிகரின் கேள்விக்கு நச் பதில் கொடுத்த விஜயலக்ஷ்மி.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் அமலாபால் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இந்த வதந்தியை இருவருமே மறுத்தனர் ஆனால் நடிகை அமலாபால் வேறு ஒருவரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த நபர் வடநாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் எனவும், அவரைத்தான் அமலாபால் காதலித்து வருவதாகவும் தற்போது சமூக வலைதளத்தில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is post-3-jpeg.jpg

அதே போல நடிகை அமலா பால் சிங்குடன் இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது அதில் ஒரு புகைப்படத்தில் அமலாபால் சிங்கை காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி கட்டிக் கொண்டு இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரை இன்ஸ்டாகிராமில் விஷ்ணு விஷால் கூட பாலோ செய்துள்ளார் என்பது தான் ஹைலைட். இதனால் அமலா பால் காதலிப்பதாக சொன்ன நபர் இவர் தானா என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்து அமலா பால் அறிவிப்பார் என்று எதிர்பார்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அமலா பால், தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement