நான் மோசமான நடிகை என்று அவர் சொன்னார்.! காதலர் குறித்து பேசிய அமலா பால்.!

0
2416
Actressamalapal
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Amala-Paul

இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : பிரியா பவானி ஷங்கர் வயசானல் இப்படி தான் இருப்பார்களாம்.! அவரே பதிவிட்ட புகைப்படம்.!

- Advertisement -

சமீபத்தில் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய அமலா பால், தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமலா பால் தனது காதலர் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஆடை படத்தின் கதையைக் கேட்டதும் நான் முதன் முதலில் அவரிடம் தான் சொன்னேன் அந்த கதையை கேட்டதும் அவர் முதலில் சொன்ன வார்த்தை இந்த படத்திற்காக முதலில் உன்னை நீ தயார் படுத்திக்கொள் என்பதுதான் 100% உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்த படத்திற்கு நீ தயாராக வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார்.

-விளம்பரம்-

அவர் எப்போதும் என்னிடம் இருக்கும் நிறைகளை மட்டும் கூற மாட்டார் இருக்கும் குறைகளை அவர் சுட்டிக் காட்டுவார். என்னுடைய படங்களை பார்த்த பிறகு நான் ஒரு மோசமான நடிகை என்று என்னிடம் சொன்னார். நான் இன்னமும் எப்படி திரைத்துறையில் இருந்து வருகிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். என் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த நம்பிக்கை என்று நான் நம்புகிறேன். அதனால் அனைத்தும் நான் அவர்கள் கலந்துரையாட வேண்டும். அவருக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும், நாங்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம் .நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய அபிப்பிராயத்தை அவரிடம் கேட்டதுண்டு அவர் மிகவும் புத்திசாலி என்று தனது காதலர் தினத்தை பெருமை பேசி உள்ளார் அமலாபால்.

Advertisement