தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை அமலா பால் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பார்த்து பலர் பாராட்டியும் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார்.
மேலும், இவர் தமிழில் மதராசபட்டினம், தெய்வ திருமகள்,தலைவா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் திருமணம் கொஞ்சம் மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து பிவேறுபாடு ஏற்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் நடிகை அமலா பால் அவர்கள் பிரபல பஞ்சாபை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதையும் பாருங்க : மாடர்ன் உடையில் இருக்கும் மகளை வாத்தி கம்மிங் பாடல் மூலம் குடும்ப குத்து விளக்ககாக மாற்றிய தாய். வைரலாகும் வீடியோ.
ஆடை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை அமலாபால் அவர்கள் பவிந்தர் சிங் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறியிருந்தார். பவிந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். பின் கொஞ்ச நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன மாதிரி புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வந்தது. ஆனால், உடனே அதை பவிந்தர் சிங் டெலிட் செய்து விட்டார்.
இந்நிலையில் நடிகை அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் ஆகி விட்டதாகவும், அந்த இரண்டாவது திருமணமும் பிரச்சனையில் இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் அவர்கள் தன்னுடைய காதல் குறித்தும், திருமணம் குறித்தும் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் கிடையாது. நான் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கிறேன்.
அதை முடித்த உடனே என்னுடைய திருமணத்தை பற்றி நான் கூறுகிறேன். என்னுடைய காதல் பற்றி யாரும் கேட்காமலேயே நான் சொல்லி இருந்தேன். அதேபோல் என்னோடு திருமணத்தைப் பற்றியும் நான் கூறுவேன். ஆனால், அதுவரைக்கும் என்னுடைய கல்யாணத்தைப் பற்றி யாரும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும், பவிந்தர் சிங் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பேபி, செல்லம், அம்மு என்று தன்னுடைய லவ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ஆனால், அமலாபால் காதல் இருக்கிறது என்று சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஒருவேளை இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்குமா என்றும் பேசப்பட்டு வருகிறது. தற்போது அமலாபால் சோசியல் மீடியாவில் ஒரு ட்வீட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உனக்கு நீ மட்டும் தான் பெஸ்ட். ஹீரோ, ஹீரோயின், தோழி, சோல் மேட் எல்லாமே உனக்கு நீ மட்டும் தான். தனக்குத் தான் மட்டும் தான் என்று பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் ரசிகர்கள் ஒருவேளை அமலாபல் மறுபடியும் சிங்கிள் ஆகிவிட்டாரா?? என்றும் கேட்டு வருகிறார்கள்.