நாய்க்கு பேன் பார்க்கும் பிரபல நடிகை.! கிண்டல் செய்த ரசிகர்கள்.! யார் தெரிகிறதா.?

0
651
Amala-paul

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் கூட கடந்த மே மாதம் வெளியானது.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார். தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். மேலும் தனது சமீப கால நடவடிக்கைகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்த அமலா பால், தனது மடியில் நாய் ஒன்றை வைத்துக் கொண்டு அதற்கு பேன் பார்த்து, தலைவாரிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அமலா பாலின் மேக் அப் மேன் ஒருவர், அவரின் தலை முடியை வாரி அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால்,அமலா பால் தன் மடி மீது வைத்துள்ள தனது செல்ல நாயின் முடியை சீப்பை வைத்து வாரிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலா பால்.