மணிரத்னம் கேட்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்துள்ள அமலா பால் – அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.

0
394
Amalapaul
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை மறுத்து இருக்கிறார் அமலா பால். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவரின் நீண்ட நாள் கனவுப்படமே ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-
ponniyinselvan

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள்.

- Advertisement -

வாய்ப்பை நிராகாரித்த அமலா பால் :

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் கலை இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்து இருக்கிறார் அமலா பால்.

முதல் முறை ஆடிஷன் :

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ‘நான் மணிரத்தினம் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவர் படத்தில் நடிக்க மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், முதல் நேர்காணலுக்கு பின்னர் அது நடக்கு முடியாமல் போனது. அதை எண்ணி நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். பின்னர் 2021 ஆம் ஆண்டு அதே படத்திற்காக மீண்டும் எனக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது.

-விளம்பரம்-

அமலா பால் சொன்ன காரணம் :

நான் ஏற்கனவே சொன்னது போல அந்த படத்தில் நடிக்கும் அளவிற்கு நான் சரியான மனநிலையில் இல்லை. அதனால் அந்தப் படத்தில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை. இதனால் நான் வருத்தப்படுகிறேன் என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது.சில விஷயங்கள் சரியானவை. இது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அமலா பால் இரண்டாம் திருமண சர்ச்சை :

கடந்த 2020 ஆம் ஆண்டு தான் நடிகை அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஆனால், தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அமலா பால் கூறி இருந்தார். சமீபத்தில் அமலா பால் அளித்த புகாரின் பெயரில் பவிந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கும் அமலா பாலுக்கும் பதிவு திருமணம் நடந்ததற்காக ஆதாரங்களை பவிந்தர் சிங் சமர்ப்பித்த நிலையில் அவர் ஜாமினில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement