இஸ்லாம் பெண்ணாக மாறி நடிக்கும் அமலா பால் ! விவரம் உள்ளே !

0
719
amala-paul
- Advertisement -

இயக்குனர் விஜயின் முன்னாள் மனைவி அம்லா பால் சமீப காலமாக சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாண்டிச்சேரியில் கார் வாங்கியது, வரி ஏய்ப்பு செய்தல் எனக் கூறி ஒரு இவர் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது.
amala-paul
அவற்றை எல்லாம் தூசுதட்டிவிட்டு தற்போது படங்களில் நடிக்க பிஸியாகி உள்ளார். தனது முன்னாள் கணவர் ஏ.எல் விஜயுடன் நேர்ந்த விவாகரத்துக்கு பிறகு தற்போது மீண்டும் முழுமூச்சாக பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் அமலா.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த அம்லா தற்போது தெலுங்கிலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது ‘ஆயுஷ்மான் பவ’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுக இருக்குனர் சரண்தேஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு காதல் கதையாக உருவாகி வருகிறது. படத்தில் ஹீரோயினாக வரும் அமலா பால் முஸ்லீம் பெண்ணாக மாறி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியது. படத்தில் இன்னொரு நாயகியாக சினேகாவும் நடித்து வருகிறார்.

Advertisement