அமலா பாலின் புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தத்தில் கமன்ட் செய்த நபர் – அமலா பால் கொடுத்த கூலான பதிலடி.

0
1633
amalapaul
- Advertisement -

மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் காலடி எடுத்து வைத்து பிரபலம் அடைந்துள்ளனர். நயன்தாரா, பாவனா, மாளவிகா மோஹனன் என்று பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார். இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப் சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார்.அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-101-1024x853.jpg

தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதில் ரசிகர் ஒருவர் ”லெஜெண்டுக்கு மட்டும்தான் தெரியும்” என்று இரட்டை அர்த்தத்தில் பதில் அளித்திருந்தார். அதற்கு பலரும் லைக் கூட போட்டிருந்தனர். ரசிகரின் இந்த கமென்டிற்கு பதில் அளித்துள்ள நடிகை அமலா பால் ‘என்ன மார்பகம் தானே ? சிரிப்பு தாங்க முடியவில்லை. நாம் 2020-ல் இருக்கிறோம் பிரதர் #லெஜண்ட்மற்றும்மார்பகம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement